• Dec 25 2024

2 மணி நேரம் ஒளிபரப்பாகிறது ’சிறகடிக்க ஆசை’.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து..

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அவ்வப்போது பிரபலம் அடைந்த சீரியல்கள் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். முதலில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் 2 மணி நேரம் ஒளிபரப்பான நிலையில் அதன் பிறகு ’சின்ன மருமகள்’ ’பாக்கியலட்சுமி’ ஆகிய தொடர்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று 2 மணி நேரம் ஒளிபரப்பானது. அந்த வகையில் தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ’சிறகடிக்க ஆசை’ சீரியல் 2 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக இருக்கிறது என்பதும் 30 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் எபிசோடுகளே பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்கும் நிலையில் 2 மணி நேரம் ஒளிபரப்பானால் அதில் அசத்தலான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மீனா மற்றும் முத்துவுக்காக மாடியில் ரூம் கட்டுவதற்காக அண்ணாமலை திட்டமிடும் நிலையில் அவருக்கு விஜயா முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த நிலையில் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக  இருக்கும் 2 மணி நேர நிகழ்ச்சியில் முத்து - மீனாவுக்காக அண்ணாமலை ரூம் கட்டுவதில் உறுதியாக இருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதேபோல் ரோகிணி பல பிராடுத்தனம் செய்து கொண்டு தப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் சிக்கும் வகையிலான காட்சிகள் இந்த 2 மணி நேர எபிசொட்டில் இருக்கும் என்றும் கூறப்படுவதால் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ’சிறகடிக்க ஆசை’ ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அன்றைய 2 மணி நேர எபிசோடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement