தமிழ் பிக்பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்த பிறகு ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வெளியாகிய இன்றைய நாள் அடுத்த ப்ரோமோவில் என்ன நடைபெறுகிறது என்று பார்ப்போம்.
வெளியாகிய ப்ரோமோவில் ரயான் " காலையில் சாப்பிட்டவங்க அவங்க தட்ட கழுவி வச்சி இருந்தா பிரச்சினையே இல்லை. நான் வாரவரைக்கும் அது அங்கதான் இருக்கு. சின்னப்புள்ள தனமா இருக்காங்க அதான் வீட்டுல இருந்து வரக்குள்ள யாரையாவது கூட்டிட்டு வாங்க என்று ஒட்டுனேன் என்று சொன்னேன். அதுக்கு உங்க வீட்டுல இருந்து வந்தாங்க தானே அது எல்லாம் நான் பார்த்தே என்று சொல்லுறா ஏன் அவ புரிஞ்சிக்காம இருக்கிறாள்" என்று பவித்ராவிடம் சொல்கிறார்.
அதற்கு பவித்ரா " வேணும் என்று செய்றாங்க அப்படிங்கிறது நமக்கு தெரியுது அதுக்காக நாங்க ஏன் இடம் கொடுக்கணும்" என்று கேட்கிறார். பின்னர் ரயான் " இல்ல அந்த இடத்துல நான் தப்பு பண்ணிட்டேன் சாரி சாரினு அழுக ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு விஷயத்தை வாதிட தைரியம் இருக்கு என்றால் அதை எதிர்க்க ஏன் தைரியம் இல்ல" என்று சாச்சனா குறித்து பேசுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.
Listen News!