பிரபல நடிகர் அஜித் 2 படங்களை நடித்து முடித்து விட்டு தற்போது கார் ரேசிங்கில் கலந்து கொண்டு வருகிறார். துபாயில் 24 ஹவஸ் ரேஷிங் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த கார் ரெசிங் டதொடர்பான செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் அனைவருக்குமே சினிமாவை தாண்டி மற்ற விஷயங்கள் மேல் ஒரு பேஷன் இருக்கும். அப்படி அஜித்திற்கு கார் ரேஷ் மிகவும் பிடிக்கும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தற்போது அஜித் துபாயில் நடைபெறும் 24 Hours ரேஸில் தனது குழுவினருடன் கலந்துகொண்டுள்ளார்.
அஜித் கலந்து கலந்து கொள்ளும் கார் ரேசிங் பற்றிய விபரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 24 மணி நேர ரேஸிங் அதாவது இன்று மதியம் 3.45 pm மணிக்கு கார் எடுத்தால் , அடுத்த நாள் 3.45 pm மணி வரைக்கும் ஓட்ட வேண்டும். ஒரு டீமில் 3 இருந்து 5 டிரைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மாற்றி மாற்றி ஓட்டுவார்கள். ஒரு டிரைவர் குறைந்தது 2 மணி நேரம் ஓட்டனும், 24 மணி நேரம் இருக்கு என்று மெதுவாக ஓட்ட முடியாது. 240 கிலோ மீட்டர் இந்த ஸ்பீட்ல 24 மணி நேரம் ஓட்ட வேண்டும்.
அஜித்தின் டீமில் 4 டிரைவர்கள் இருக்கிறார்கள். ஆளுக்கு குறைந்தது 6 மணி நேரம் தொடர்ந்து மின்னல் மாதிரி ஓட்டவேண்டும். இந்த போட்டியில் எந்த டீம் 24 மணி நேரத்தில் அதிக தூரம் ஓட்டி இருக்கிறார்களோ அவர்களே வின்னர். இன்று துபாய் நேரத்தின் படி 1 மணிக்கு அஜித் ரேஷிங்கில் முதலாவதாக களமிறங்கியுள்ளார். நாளை 1 மணிக்கு இந்த போட்டி நிறைவடையும்.
அதன் பின்னரே வின்னர் யார் என்று அறிவிக்கப்படும். இந்த வயசுல இவ்வளவு கடுமையான ஒரு ரேஸ்க்காதன்னை தயார் படுத்திகொண்டு பல இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் அஜித். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!