• Feb 26 2025

சர்தார் 2 படம் எடுப்பதில் மோசடி நடக்கின்றதா? படக்குழு பதில்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

எஸ். இலட்சுமன் குமார் இயக்கத்தில் உருவாகி 2022ம் ஆண்டு வெளியான படமே சர்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் இரு வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன் படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூலையும் பெற்றிருந்தது.


இவ்வாறு சர்தார் 1 அமோக வெற்றியை பெற்றுக் கொண்டதால் சர்தார் 2 திரைப்படத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவெடுத்துள்ளது. அந்த நிலையில் தற்போது படக்குழுவால் ஒரு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்கள் கூறுகையில் , தங்களின் சர்தார் 2 படத்தில் நடிப்பதற்கு பணம் மற்றும் பிறசலுகைகளுக்கு ஈடாக சில மோசடிகள் நடைபெறுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் எங்கள் படத்தில் நடிப்பது தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான இடங்களில் இருந்து யாராவது தொடர்புகொண்டால்  அது போலியானது என்று கூறியதுடன் மக்கள் யாரும் ஏமாறவேண்டாம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement