• Jun 07 2025

கமல்ஹாசனை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்! துணை இயக்குனர்களுக்கு செய்த நெகிழ்ச்சியான செயல்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணியுடன் வந்து பல சாதனைகளை படைத்தது முன்னணி நடிகர்களாக பலர் இருந்தாலும் தனது திறமையினால் மாத்திரமே முன்னேறி இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக காணப்படுகினறார் சிவகார்த்திகேயன்.


இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் ராஜ்குமார் இயக்கத்தில் அமரன் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். குறித்த படம் ஏஜென்ட் முகுந்த் எனும் இராணுவ வீரனின் வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையிலேயே சிவகார்த்திகேயன் செய்த செயல் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


‘அமரன்' திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து துணை இயக்குநர்களுக்கும் Fossil வாட்ச் பரிசாக வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியாகி ஹிட் ஹோடுத்த விக்ரம் திரைப்படத்தின் துணை இயக்குனர்களுக்கு கமல்காசன் பைக் பரிசளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement