திரையுலகத்தில் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் நாயகியாக ஆதிக்கம் செலுத்தி, பாரத தேசத்தின் அழகிய நடிகை என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்த நடிகை சரோஜா தேவி, இன்று (ஜூலை 14, 2025) காலை 87வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
இந்த செய்தி திரையுலகத்தையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ்த் திரையுலகின் பெரும் சகாப்தம் முடிவடைந்துவிட்டது என்றே ரசிகர்கள் நெஞ்சமுடைந்து கூறுகிறார்கள்.
சரோஜா தேவி தமிழ்த் திரையுலகின் முப்பெரும் நட்சத்திரங்களான, மகாநாயகன் சிவாஜி கணேசன், மெகாஸ்டார் எம்.ஜி.ஆர் உட்பட பெரும் பிரபலங்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். அத்தகைய நடிகை தற்பொழுது இறந்தது அனைத்து திரையுலக பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Listen News!