விஜய் டீவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான சூப்பர் சிங்கர் சீசன் 10, தற்போது அதிரடி கட்டத்திற்குள் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியின் Finalist தேர்வுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய புரொமோவில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஒரு திடீர் திருப்பம் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் பலர் வேறு மாநிலங்களைச் சேர்ந்த புதிய பங்கேற்பாளராக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை அசத்தி வருகின்றார்கள். அந்த வகையில், இளம் பாடகியான நஸ் ரீன், தனது இனிமையான குரலால் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
சமீபத்திய எபிசொட்டில் அவர் பாடிய பாடல் முடிவடைந்ததும் நடுவர்கள் நேரடியாக அவருக்கு 'Final Ticket' அளித்து, “நீங்கள் தான் மூன்றாவது Finalist..!” என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதைக் கேட்ட நஸ் ரீன் மகிழ்ச்சியில் கண்கலங்கிய நிலையில் நின்றார்.
இந்த அறிவிப்பிற்குப் பிறகு, நஸ் ரீனின் அம்மா மேடைக்கு வந்து உணர்வு பூர்வமாக கதைத்திருந்தார். இந்த தருணம் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்துவிட்டது. இந்த புரொமோ பார்வையாளர்களிடையே நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Listen News!