தமிழ் சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் நயன்தாரா, தனது நடிப்பு, அழகு மற்றும் தைரியம் கலந்த திரைக்கதையால் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். தற்போது நயன்தாராவின் சம்பள விவகாரம் ஒட்டுமொத்த திரைத்துறையையும் உலுக்கியுள்ளதாக தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான "டெஸ்ட்" திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், அது நயன்தாராவின் பட வாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, தற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல ஹிட் படங்களை இயக்கிய அனில் ரவிப்புடி தான் இந்தப் படத்தையும் இயக்கவிருக்கின்றார்.
சமீபத்தில் நடந்த கதை விவாதங்களில், நயன்தாரா கதையை கேட்டு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகின்றது. எனினும், சம்பள விவகாரத்தில் தற்பொழுது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.18 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இது திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக நயன்தாரா ஒரு படத்திற்காக ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில், இத்தகவல் திரைத்துறையை கலக்கியுள்ளது. ஒரு படத்திற்காக 18 கோடி என்பது இந்திய திரை உலகில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த சம்பளங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!