• Aug 18 2025

'மைனே பியார் கியா' படத்தின் முதல் பாடல் நாளை மாலை வெளியீடு!அறிவிப்பை விடுத்த படக்குழு..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

'ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், அதன் பிறகு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வெளியான ‘ஆச கூட’ பாடலின் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகினார். தொடர்ந்து, அண்மையில் வெளியாகிய பான் இந்தியன் படம் ‘கண்ணப்பா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இப்போது, ப்ரீத்தி முகுந்தன் மலையாள சினிமாவிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த இருக்கிறார். அவர் நடித்துள்ள புதிய படம் ‘மைனே பியார் கியா’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஃபைசல் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஹ்ரிது ஹருன் நடித்துள்ளார். இவர் ‘முரா’, ‘All We Imagine As Light’ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர்.

இந்த காதல் கலந்த குடும்பத்தோடு பார்க்கத்தக்க திரைப்படத்தில், அஸ்கர் அலி, மிதுன், ஜெகதிஷ், முஸ்தஃபா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, ஜியோ பேபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படத்தின் முதல் பாடலான 'மனோஹரி' லிரிக் வீடியோவை படக்குழு நாளை (ஆகஸ்ட் 19) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக  தகவல் வெளியாகி  உள்ளன .

Advertisement

Advertisement