• Jan 11 2025

இதனால தான் கோட் படத்துக்கு ஆடியோ லாஞ்ச் வைக்கல..! அர்ச்சனா கல்பாத்தி பகிர்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் இளையதளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ளது.

விஜயின் 68ஆவது படமான கோட் படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் சினேகா, பிரபுதேவா, லைலா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பதால் இந்த படம் மீதான  எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாதது தொடர்பில் இதன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் கொடுத்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், விஜயின் படங்களில் இசை வெளியீட்டு விழா தான் மாஸ் காட்டும். அந்த நிகழ்ச்சியில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிகளை ரசிகர்கள் அடுத்த பட இசை வெளியீடு வரை உற்சாகமாக பகிர்ந்து வருவார்கள். ஆனால் கோட் படத்திற்கு இசை வெளியீட்டு ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட் படத்திற்கு அதிகமான ஹைப்பை ஏற்படுத்த விரும்பவில்லை மொத்தத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கு நேரமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் ஒரு ஆண்டு காலமாக மெனக்கட்டுள்ளதாகவும் பல நாடுகளுக்கு பயணம் செய்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் இந்த படத்தின் பைக் காட்சிகள் மிக அதிகமான நேரம் செலவிட்டு எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ள கோட் படம் சர்வதேச அளவில் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது

Advertisement

Advertisement