• Dec 26 2024

பிக் பாஸுக்கு பின் மிகப்பெரிய வெற்றிகண்ட இரு போட்டியாளர்கள்! அவர்கள் யார் யாரென தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இது தற்போது 7 வது சீசனில் இறுதிக் கட்டத்திற்கு வந்து விட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில், தொடர்ந்தும் சினிமா துறையில் வெற்றி கண்டவர்களாக இருவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதன்படி, பிக் பாஸ் மூலம் எத்தனையோ பேர் பிரபலயம் ஆனாலும் கவின் மற்றும் ஹரிஷ் கல்யாண் அளவிற்கு வெற்றிபெறவில்லை என சொல்லலாம்.

அதற்கு காரணம், பிக் பாஸ் புகழ் மட்டுமல்ல. அவர்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும், கதைக்களங்களும் தான். இது ரசிகர்கள் மத்தியில் மேலும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுக்கின்றது.


அதிலும் இந்த ஆண்டு வெளியான கவினின் 'டாடா' படமும் சரி, ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்' படமும் சரி இந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களின் லிஸ்டில் சேர்ந்துள்ளது.

எனவே, இம்முறை பிக் பாஸ் வீட்டில் போட்டியிட்டுள்ள போட்டியார்களில் யார் வின் பண்ணுவார், யார் யாரது வாழ்க்கை எவ்வாறு மாறப்போகிறது என்பதையும் பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement