• Apr 24 2026

பிக் பாஸிலிருந்து வெளியேறிய அனன்யா உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்த முதல் போட்டோ!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்ற போட்டியாளர்களுள் ஒருவர் தான் அனன்யா.

பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இது வரை நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களை விட இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை என வித்தியாசமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல, இதுவரை இல்லாத போன்று முதல் வாரத்திலையே நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.


இவ்வாறு அனன்யா ராவ் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் பவா செல்லத்துரை தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென அனன்யா ராவ் வெளியேறினார்.

இதை தொடர்ந்து, மீண்டும் பிக் பாஸ் வழங்கிய வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் உள்ளே சென்றார் அனன்யா. ஆனாலும் மக்கள் எதிர்பார்த்த அளவில் அவர் விளையாடவில்லை.

இதன்  காரணமாக இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில், பி க்போஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அனன்யா முதலாவதாக பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தனது சகோதரியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து 'என்னுடைய பாதி' என கேப்சன் போட்டுள்ளார்.

தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement