• Dec 26 2024

மீண்டும் பிரச்சனை வரலாம்.. இந்த முறை சுதாரித்த தளபதி விஜய்.. இப்ப என்ன செய்யும் ஆளுங்கட்சி?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படக்குழுவினர் இருப்பதாகவும் அங்கு தான் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புடன் ’கோட்’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று  தெரிகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முதலில் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் விஜய் ’சென்னை வேண்டாம் , என்று கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதன் பின்னர் மதுரை மற்றும் கோவை ஆகிய இடங்களை பரிசீலனை செய்தபோதுதான் விஜய் தமிழ்நாட்டில் வேண்டாம், வெளிநாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறியதாகவும் இதனை அடுத்து மலேசியா அல்லது துபாய் ஆகிய இரண்டில் ஒரு இடத்தில் ’கோட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.



விஜய் நடித்த முந்தைய படமான ’லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்த போது திடீரென காவல்துறை அனுமதிக்காததால் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது என்பதும் அதனால் விஜய் இனிமேல் சென்னையில் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

’லியோ’ படத்திற்கு பிரச்சனை வந்தது போலவே ’கோட்’ படத்திற்கும் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக தான் விஜய் முன்கூட்டியே சுதாரித்து துபாய் அல்லது மலேசியாவில் இசை வெளியீட்டு விழா வைக்க அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. வெளிநாட்டில் இசை வெளியீட்டு விழா நடத்தினால் தமிழக அரசால் எந்த பிரச்சினையும் செய்ய முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement