• Dec 27 2024

நதியா தான் அப்படின்னு பார்த்தா.. அவங்க தங்கச்சி அதுக்கு மேல இருக்காங்களே.. வைரல் புகைப்படம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகை நதியாவுக்கு தற்போது 58 வயது ஆகும் நிலையில் இந்த வயதிலும் கூட அவர் இளமையாக காணப்படுகிறார். அவரை புதிதாக பார்ப்பவர்கள் 40 வயது தான் மதிப்பார்கள், அந்த அளவுக்கு அவர் தனது உடலை ஃபிட்டாக வைத்திருப்பார் என்பது அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது.

ஆனால் நதியா கடந்த 1984 ஆம் ஆண்டிலேயே சில மலையாள படங்களில் நடித்தார் என்பதும் அதனை அடுத்து 1985 ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற தமிழ் படத்தில் நடித்த நிலையில் அதனை அடுத்து அவர் தமிழில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, மோகன், சுரேஷ் என பல பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார்

ஆனால் அதே நேரத்தில் மூன்று வருடங்கள் மட்டுமே அவர் தமிழில் நடித்த நிலையில் திடீரென அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள் பிறந்து, மகள்கள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு தான் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனார் என்பதும் அதன் பிறகு சில படங்களில் நடித்து வரும் நதியா கடந்த ஆண்டு வெளியான ’எல்.ஜி.எம்’ என்ற படத்தில் கூட நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நதியா ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது சில புகைப்படங்களை பதிவு செய்து வருவார், அந்த வகையில் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அன்னை மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மேலும் ’என்னுடைய அம்மா மிகவும் எளிமையானவர், அதே நேரத்தில் அபாரமானவர், விதிவிலக்கானவர் என்று கூறியதோடு அவருடைய இரண்டு மகள்கள் போலவே’ என்று பதிவு செய்துள்ளார், இந்த பதிவுக்கு ஏராளமான லைக் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவில் உள்ள நதியாவின் சகோதரியை பார்த்த ரசிகர்கள் நதியா தான் இளமையாக இருக்கிறார் என்றால் அவருடைய சகோதரி அவரை விட மிக இளமையாக இருக்கிறார் என்றும் டீனேஜ் பெண் போல் இருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement