நடிகை நயன்தாராவின் திருமண விழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படம் தற்போது இரட்டை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் மீது நயன்தாரா எழுப்பிய புகாரே துவக்கமாக இருந்தது. தனுஷ் தயாரித்த ‘நானும் ரௌடி தான்’ திரைப்படத்தின் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த நயன்தாரா அனுமதி கேட்டதாக கூறப்பட்டாலும் தனுஷ் மறுத்ததாக செய்திகள் வெளியானது.
ஆனாலும் அந்த காட்சிகளை அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தியதாக கூறி தனுஷ் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதே ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்திலும் இருந்து சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் பதிப்புரிமை ஏபி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடம் உள்ள நிலையில் அவர்களும் இதற்கு எதிராக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கான பதில் விளக்கங்களை அளிக்க நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Listen News!