அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள தேர்தலில் போட்டி இடுவதற்காக பிரபல நடிகர் விஜய் தனக்கென தமிழக வெற்றி கழகம் என ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து பொது மக்களுக்கு சேவை செய்து வருகின்றார். தேர்தல் நோக்கிய வேலைகளில் மிகவும் பரபரப்பாக இருந்து வரும் இந்த கட்சியில் இருந்து விலகுவதாக இளம் பெண் தொண்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
20 வயதாகும் வைஷ்ணவி அவரது குடும்பத்தில் திமுக ,அதிமுக கட்சிகளில் இருந்த போதும் இவர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து பல சேவைகளை செய்து வந்ததுடன் 2026 ஆம் ஆண்டு வெற்றி உறுதி எனவும் கூறி வந்தார்.
மேலும் இவர் தற்போது எழுதிய கடிதத்தில் விஜய் கட்சியில் மேலிடத்தில் இருப்பவர்கள் "நீயெல்லாம் ஒரு பொண்ணா அப்டின்னு? உனக்கெல்லாம் எதற்கு அரசியல் ஒழுங்கா வீட்டில் இரு " என உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அவதூறாக பேசியதாக குறிப்பிடுள்ளார். மேலும் இவர் தான் சேமித்த 5 லட்ஷம் பணத்தினை சமூக சேவைக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிடுள்ளார்.
Listen News!