• Oct 24 2026

இந்த தீபாவளியில் யார் கிங்.? போட்டிக்கு தயாராகும் திரைப்படங்கள்.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இல்லாவிட்டாலும், பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராகியுள்ளன. சூர்யா, நயன்தாரா, விஜய் ஆண்டனி, பிரபுதேவா உள்ளிட்டோரின் படங்களுடன், இந்திப் படமான ‘ராமாயணா’வும் களமிறங்குவதால் திரையுலகில் போட்டி அதிகரித்துள்ளது.

சூர்யா நடிப்பில் ஜீத்து மாதவன் இயக்கியுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படமும் கவனம் பெற்றுள்ளது. இதன் டீசர் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மறுபுறம், விஜய் ஆண்டனி நடிப்பில் மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ திரைப்படமும் இசை, நடனம் ஆகிய அம்சங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகமும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் படங்கள் களமிறங்குவதால், இந்தத் தீபாவளியில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வசூலில் முன்னிலை பெறப்போகும் திரைப்படம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement