• Oct 24 2026

நீலாம்பரி மீண்டும் வருகிறாரா.? படையப்பா 2 குறித்து கே.எஸ். ரவிக்குமார் வெளியிட்ட தகவல்..

shali / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றான படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் கருத்துக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படையப்பா திரைப்படத்தில், நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றது. ரம்யா கிருஷ்ணன் நடித்த இந்தக் கதாபாத்திரம் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், படையப்பா 2 திரைப்படத்தை உருவாக்குவது தொடர்பாக ஏற்கனவே விவாதித்ததாக இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கமல்ஹாசனுக்காகவும் படையப்பா 2 கதையை உருவாக்க விரும்பியதாகக் குறிப்பிட்டார். நீலாம்பரி இறந்துவிட்டதால், அவர் மறுஜென்மம் எடுத்து வரும் வகையில் திகில் அம்சங்கள் நிறைந்த கதையாக இதனை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கதையைக் கேட்ட ரஜினிகாந்த், நன்றாக இருப்பதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினரும் படத்தை ஆர்வத்துடன் ரசிப்பதைக் கவனித்த ரஜினிகாந்த், ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதை தற்போதைய சூழலுக்குப் போதுமானதாக இருக்காது எனக் கருதியதாக கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என ரஜினிகாந்த் விரும்பியதாகவும் கூறியுள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் பிற திரைப்படங்களில் பிஸியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இறைவனின் அருளால் எதிர்காலத்தில் படையப்பா 2 உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement