• Dec 26 2024

வாந்தி வருது, வயித்தால போகுதுன்னு என்டா தர்ஷா செல்லத்த அழ வைக்கிறீங்க.! பிக் பாஸ் அலப்பறை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 11வது நாள் நடைபெறுகின்றது. இந்த நாளில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. விஜய் சேதுபதி இந்த சீசனுக்கு ஹோஸ்ட் ஆக களம் இறங்கி உள்ளார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

எனினும் தயாரிப்பாளர் ரவீந்தர் முதலாவது வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியே சென்றிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதற்கு காரணம் அவர் பல வருடங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ பண்ணி வருகின்றார். இதனால் அவர் சிறந்த கண்டென்ட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.


இந்த நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நான் நல்லாத்தான் சமைச்சேன் ஆனா அவர்கள் வாந்தி வருது, வைத்தால போகுது என்றெல்லாம் கஷ்டப்படுற மாதிரி பேசுறாங்க. என்ன ரொம்பவே டார்க்கெட் செய்றாங்க. இது ரொம்ப வேதனை அளிக்கின்றது என்று தர்ஷா புலம்பி அழுகின்றார்.

மேலும் அவரை சமாதானப்படுத்த முயலும் போதும் என்னை வெளியில் உள்ள மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்று வேதனைப்படுகின்றார். தற்போது தர்ஷா அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement