• Aug 27 2025

எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க ..! சிவராஜ்குமார் காலில் விழுந்து ஆசிர் பெற்ற Ravi & Kenisha

Aathira / 22 hours ago

Advertisement

Listen News!

'ரவி மோகன்  ஸ்டுடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை இன்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பித்து வைத்துள்ளார் ரவி மோகன். இந்த விழாவில் சினிமா துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள். 

தமிழ் சினிமாவில் எந்த ஒரு கிசுகிசு தகவலிலும் சிக்காமல்  காணப்பட்டவர்  ரவி.  ஆனால் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மனைவியுடன் ஏற்பட்ட மோதல், விவாகரத்து போன்ற காரணங்களை தொடர்ந்து  கெனிஷா பற்றிய விபரங்கள் வெளியாகத் தொடங்கின.

ஆனாலும்  தான் இருளில் இருந்த போது எனக்கு ஒளியாக வந்தவர் கெனிஷா, தன்னை மீட்டெடுத்தவர் கெனிஷா என்றும்  ரவி மோகன் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதன் பின்பு இருவரும் சேர்ந்து தற்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை  ஆரம்பித்து வைத்துள்ளனர். 


குறித்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு திருப்பதிக்குச் சென்ற ரவியும் கெனிஷாவும் ஆசீர் பெற்று வந்தனர். 

இதைத்தொடர்ந்து இன்றைய தினம்  'ரவி மோகன் ஸ்டுடியோஸ்'  தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் வெள்ளை நிற உடையில் ரவி மோகன் கெனிஷா ஆகிய இருவரும் ஜோடியாக வலம் வந்தனர். 

 இந்த நிலையில்,  'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' திறப்பு விழாவில் வைத்து  நடிகர் சிவராஜ்குமார் காலில்  ஒன்றாக விழுந்து  ரவியும் கெனிஷாவும் ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.   தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பேசு பொருளாக காணப்படுகிறது.


 

Advertisement

Advertisement