• Aug 27 2025

பிரபல நடிகை லட்சுமி மேனன் மீது வழக்கு...!கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்காலத் தடை வழங்கியுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் ஒரு ஐ.டி. நிறுவன ஊழியரை தாக்கியதாகும் குற்றச்சாட்டில், லட்சுமி மேனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சம்பவம் கடந்த வாரம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலின் அருகே நடந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபர் தனது புகாரில், நடிகை மதுபோதையில் தன்னை வாக்குவாதத்திற்கு பிறகு தாக்கியதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில், தன்னை கைது செய்யக்கூடிய நிலை உருவாகி விட்டதாகக் கூறி, லட்சுமி மேனன் முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனுவின் அடிப்படையில், நீதிமன்றம் அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டாம் எனக் காவல்துறைக்கு இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியுள்ளது.

முன்ஜாமின் மனுவை தொடர்ந்து விசாரிக்க நீதிமன்றம் எதிர்வரும் வாரத்தில் கூடவுள்ளது. அதுவரை நடிகைக்கு உள்நாட்டில் பயணம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல்வேறு விமர்சனங்களும் ஆதரவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement