சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , மனோஜ் நாயின் ஓனருக்கு போன் பண்ண, அவர் ஜீனோ என்னை விட்டு போய்விட்டதாக சொல்லுகின்றார். இதனால் ஜீனோ செத்துவிட்டதாக மனோஜ் அழுது புலம்புகின்றார். மேலும் அண்ணாமலை இந்த வருடம் மட்டும் அனேகமானோர் நாய் கடித்து இறந்ததாகச் சொல்லி மேலும் பயமுறுத்துகிறார்.
அதன் பின்பு வீட்டுக்கு வந்த முத்து ஜீனோவின் ஓனருக்கு மீண்டும் போன் பண்ணி விவரத்தை கேட்க, அவர் நாய் காணாமல் போய் உள்ளதாக சொல்கின்றார். அதன்பின்பு மனோஜ் சற்று நிம்மதி அடைகிறார். அந்த நேரத்தில் ரோகிணிக்கு மகேஷ் போன் பண்ணி க்ரிஷ் மீண்டும் அடம்பிடிப்பதாகவும் அவரை எங்கேயாவது கூட்டிப் போய் சமாளிக்கு மாறும் சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் மீனா செல்லும் வழியில் சத்யாவை சந்திக்கின்றார். இதன்போது அவருடைய பிசினஸ், கல்யாணம் பற்றி பேசிவிட்டு செல்லும் போது அங்கு க்ரிஷை ஒருவர் அழைத்துச் செல்வதை கவனிக்கின்றார். இதை தொடர்ந்து அவர் க்ரிஷை பின் தொடர்ந்து ஓடிச் செல்ல, காருக்குள் இருந்த ரோகிணி மீனா ஓடி வருவதைப் பார்த்து விடுகின்றார். இதனால் காரை வேகமாக எடுத்துச் சென்று விடுகின்றனர்.
மறுபக்கம் மோட்டார் பைக்கில் மூன்று பேர் ஹெல்மெட் அணியாமல் செல்கின்றார்கள். இதனை பார்த்த அருண் அவர்களை பின்தொடர்ந்து அவர்களை பிடிக்க, குறித்த ரவுடிகள் அருணை அடித்து விட்டு செல்கின்றார்கள். அந்த நேரத்தில் முத்து வந்து அருணை காப்பாற்றுகிறார். ஆனால் அருண் அவருக்கு நன்றி சொல்லாமல் சென்று விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!