• Aug 27 2025

நியூயார்க்கில் இருந்து பறந்து வந்த 'லவ் பேர்ட்ஸ்'.. சைக்கிள் கேப்பில் ரிலீஸான வீடியோ

Aathira / 9 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில்  முன்னணி நட்சத்திரங்களாக திகழும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா  ஆகியோர் தொடர்பில் பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.   ஆனாலும் இது   தொடர்பில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் மௌனம் காத்து வருகின்றார்கள்.

நியூயார்க்கில் நடைபெற்ற 43-வது இந்திய தின அணிவகுப்பில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் கைகோர்த்து நடந்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலானது.  இந்த ஜோடியை  'விரோஷ்' என்று அழைத்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றார்கள். 

கீதா கோவிந்தம் என்ற படத்தில் ராஷ்மிகா அறிமுகமாகி விஜய் தேவரகொண்டா உடன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகும்  ஒரு சில படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள்.  இதனாலையே இவர்கள் தொடர்பிலான கிசுகிசு தகவல்கள் பரவலாக பகிரப்பட்டது. 


அது மட்டும் இல்லாமல்  ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் வெளிநாடுகளில் அவுட்டிங் சென்ற   வீடியோக்கள், புகைப்படங்கள்  அடிக்கடி வெளியாகிக் கொண்டுள்ளன. மேலும்  விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தாருடன்  ராஷ்மிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்களும்  ரசிகர்களின் கவனம் பெற்றன.

இந்த நிலையில்,  ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் நியூயார்க்கில் இருந்து ஹைதராபாத் திரும்பியுள்ளார்கள். தற்போது அவர்கள் ஏர்போர்ட்டில்  கைகோர்த்து வந்த காட்சிகள்  வைரலாகி வருகின்றன.




Advertisement

Advertisement