மலையாளத் திரையுலகில் பிரபலமான நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார் சௌபின் சாகிர். இவர் தனது தனித்துவமான கதையாற்றல் மற்றும் ஆற்றல்மிக்க நடிப்பால் மலையாள சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
இவர் 2003ஆம் ஆண்டு உதவி இயக்குநராக அறிமுகமாகி, 2013ஆம் ஆண்டு 'அன்னையும் ரசூலும்' படத்தில் துணை நடிகராக காலடி எடுத்து வைத்தார். அதன்பின் 2017 ஆம் ஆண்டு 'பறவா' படத்தில் இயக்குநராக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து சௌபின் நடிப்பில் வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்,' 'கும்பளங்கி நைட்ஸ்,' 'மகேசிண்ட் பிரதிகாரம்,' மற்றும் 'சார்லி' போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வசூலிலும் ஹிட் அடித்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இறுதியாக வெளியான கூலி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதில் வில்லனாக மிரட்டி இருந்தார். கூலி படத்தில் இவருடைய நடிப்பு மட்டுமில்லாமல் நடனமும் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், பிரபல நடிகர் சௌபின் சாகிர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் துபாயில் நடைபெறும் விழா ஒன்றில் பங்கேற்க திட்டமிட்ட நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட பண மோசடி வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Listen News!