விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரம் தோறும் முக்கிய டாப்பிக்குகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். கடந்த வாரம் நீயா நானாவில் தெரு நாய்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
சமீப காலமாகவே தெருநாய்கள் கடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தெரு நாய்களை காப்பகங்களை வைத்து பராமரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்புக்களும் கிளம்பி வருகின்றன.
இதனால் இந்த வாரம் நீயா நானாவில் தெரு நாய்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் தெரு நாய்களுக்கு ஆதரவாக படவா கோபி, நடிகை அம்மு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது தெருநாய்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் நன்மைகள் பற்றியும் சூடு பறக்க விவாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நீயா நானாவில் பங்கு பற்றிய படவா கோபி திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டு, பொதுமக்கள் யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.. நீயா நானாவில் நான் மூன்று விஷயங்கள் பற்றி பேசினேன்.. ஆனால் அவர்கள் டிஆர்பிக்காக ஒரு பிரச்சனையை மட்டும் எடிட் பண்ணி போட்டு இருக்கின்றார்கள்.. அந்த ஷோவோட எடிட் செய்யப்படாத முழு வெர்ஷனையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தெருநாய்கள் குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் தெரு நாய்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நிகழ்ச்சி நடத்தியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Listen News!