• Aug 17 2025

நீ எடுத்த படம் மட்டும் 100 நாள் ஓடிச்சா? ப்ளூ சட்டையை விளாசிய ஆதவன்

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததாக காணப்படுகின்றது.  அதுவும் மிகவும் அரிதாகவே நிகழும் வகையில் தற்போது திரைப்படங்கள் அமைந்துள்ளன.

விஜய், அஜித், சூர்யா மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகின்றன. ஆனாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவறும் பட்சத்தில் குறித்த திரைப்படங்கள் படுமோசமாக விமர்சிக்கப்பட்டு தோல்வியை தழுவுகின்றன.

இன்னொரு பக்கம் தமிழில் வெளியாகும் திரைப்படங்களை விமர்சனம் செய்கின்றோம் என்ற கோணத்தில் வேண்டும் என்று நெகட்டிவ் கருத்துக்களை பல விமர்சகர்களும் முன்வைத்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் அதனை குறை கூறுவதில் முக்கியமான ஒருவராக காணப்படுகிறார். இவர் படங்களை மட்டும் இல்லாமல் நடிகர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் என்று திரைத் துறையை சார்ந்தவர்கள் அத்தனை பேரையும் சாடி வருகின்றார். இதனால் இவர் மீது திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தமது வெறுப்பை காட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதவன் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், விமர்சனம் பண்ணுறதுக்கு ஒரு அளவு இருக்கு.. சினிமா இல்லை என்றால் நம்ம வாழ்க்கை என்ன ஆகும் என்று யோசிக்கணும்.. Youtube ல யாரை பேட்டி எடுப்பீங்க?  யார் வீட்டு கல்யாணத்தை பார்ப்பீர்கள்? 

சினிமால வார பாட்டை தான் கச்சேரியில் பயன்படுத்துறாங்க.. சினிமாவை நம்பி பல பேர் வாழ்க்கை இருக்கு.. சினிமால குறை இருக்கத்தான் செய்யும்.. நீங்க எடுத்த படம் என்ன 100 நாள் ஓடிச்சா என்று ப்ளூ சட்டை மாறனை விளாசியுள்ளார் ஆதவன்.

Advertisement

Advertisement