பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, தனது அரசியல் மற்றும் திரைபயணத்தில் மட்டுமல்ல, பக்தியிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.
சமீபத்தில் அவர் திருத்தணி முருகன் கோவிலுக்கு நேரில் சென்று, காவடி தூக்கி, பக்திபூர்வமாக இரண்டு கிலோ எடையுள்ள வெள்ளி வேல் ஒன்றை காணிக்கையாக சாத்தியுள்ளார். இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல், பக்தர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
திருத்தணியில் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து செல்வது, மிகவும் விசேஷமான பக்தி வழிபாட்டாகக் கருதப்படுகிறது. பலரும் விரதம் இருந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை தூக்கி முருகனை வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டை நடிகை ரோஜா முழு அர்ப்பணிப்புடன் மேற்கொண்டுள்ளார்.
ரோஜாவின் இந்த காணிக்கை, அவரது பக்தியை சிறப்பாக பிரதிபலிக்கிறது. அத்துடன் இது குறித்த வீடியோக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!