தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாகும். ரசிகர்களை வெறித்தனமாக ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸை மிரளவைக்கும் மாஸ் ஹீரோ தற்போது அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். 'த.வெ.க' என்ற புதிய கட்சியுடன் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். இதன் பின்னணியில் இனிதிரையுலகில் நடிக்க மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குநர் மிஸ்கின், தளபதி விஜய் குறித்து உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இவரது பேச்சு, விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் போது அவர் கூறியதாவது, "விஜய் சினிமாவிலிருந்து விலகுவார் என்பதனை நம்ப முடியாமல் உள்ளது. அவருக்கு கலை மீது பெரும் மரியாதையும் அன்பும் உள்ளது. அவர் ஒரு அருமையான கலைஞர். அத்தகைய கலைஞர் சினிமாவை விட்டு விலகுவதனை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் உள்ளது." என்று கூறியிருந்தார்.
மேலும் , விஜய் படங்களில் நடிக்காமல் விட்டுவிட்டால், அது தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றதுடன் இத்தகைய ஸ்டாரை இனி நம்மால் காணமுடியாது என்று உருக்கமாகத் தெரிவித்திருந்தார். மிஸ்கின் கூறிய கருத்துக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!