தமிழ் திரையுலகில் பல முக்கியமான படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீ. இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரின் மூலம் பிரபலமானார். இத்தகைய நடிகர் குறித்து சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பலவிதமான அவதூறுக் கருத்துக்கள் பரவி வருகின்றன. இது ஸ்ரீ ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மனநிலை பற்றி உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X தளத்தில் நடிகர் ஸ்ரீ குறித்து ஒரு முக்கியமான கருத்தினைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது அவர் கூறியதாவது, “ஸ்ரீயின் மனநிலைக்கு மதிப்பு கொடுங்கள் என்றதுடன் நலன் விரும்பிகள், மீடியா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர் கண்காணிப்பில் இருப்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
"மருத்துவ ஆலோசனைக்கேற்ப, சில நாட்கள் அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கிறார். அவர் மனநிலை குணமடைய சில நேரம் தேவைப்படலாம்" எனவும் தெரிவித்திருந்தார். அதனால், "அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எழுந்த விமர்சனங்கள், அவதூறு வார்த்தைகள் போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார் லோகேஷ் கனகராஜ்.
நடிகர் ஸ்ரீயின் நிலைமையைப் புரிந்து, அவருக்கு நிம்மதியான சூழலை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Listen News!