தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனை பெற்று வரும். தற்போது நடித்து வரும் "ஸ்பிரிட்" மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் தயாராகி வருகின்றது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் முதலில் தீபிகா படுகோன் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.தற்போது பட குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தீபிகா படுகோன் பல கண்டிஷன்கள் போடுவதாலும், அவருடைய வேலை ஸ்டைல் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளதுடன் , அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக இயக்குநர் சந்தீப் வங்கா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அனிமல் திரைப்படத்தில் நடித்த நடிகை "திருப்தி டிம்ரி" ஹீரோயினாக தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார் .
இந்த நிலையில் A Rated படம் என்பதால் தான் தீபிகாவிற்கு பதிலாக திருப்தி டிம்ரியை சந்தீப் வங்கா நடிக்க வைக்கிறார் என வதந்தி பரவி வந்தது.இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டு எழுந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் .இந்த நிலையில் "தீபிகா படுகோன் ரூ. 20 கோடி சம்பளம் கேட்டிருந்ததாவும் தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட ஹீரோயின் 4 கோடி சம்பளத்திற்கு ஒப்பமாகி இருப்பதாகவும் " தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!