• May 29 2025

அவதூறான தகவல்கள் அனைத்தையும் 24 மணிநேரத்தில் நீக்குங்கள்.! எச்சரிக்கை கொடுத்த ரவி மோகன்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விவகாரம் தான் நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு. இந்த வழக்கு தற்போது ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் ரவி மோகன் தரப்பிலிருந்து வெளியான அதிகாரபூர்வ அறிக்கை, இந்த விவகாரம் மீதான அவதூறு பதிவுகள் மற்றும் பரப்பப்படும் தகவல்களுக்கு எதிரான எச்சரிக்கை என்பவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.


ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து மனுவே அனைத்திற்கும் ஆரம்பமாக உள்ளது. இவரது மனுவில், மனைவி ஆர்த்தியுடன் இணைந்து வாழும் ஆர்வம் இல்லை எனவும், அவரிடமிருந்து சட்டப்படி விவாகரத்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் நேரடியாக தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக, இருவரும் மத்தியஸ்தம் மூலம் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவிற்கேற்ப, மூன்று முறை இருவரும் மத்தியஸ்த அதிகாரியின் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அதில் நடிகர் ரவி மோகன் மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி நேரில் ஆஜராகி, தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.


அந்த நேரத்தில், ரவி மோகன் தெளிவாகவே, "ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. எனவே விவாகரத்து வேண்டும்" எனவும், தன்னுடைய முடிவில் மாற்றமில்லை என்பதையும் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து, இருவரின் தரப்பில் இருந்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள், அறிக்கைகள், கருத்துக்கள் உள்ளிட்டவை வெளிவர ஆரம்பித்தன. வழக்கு தொடர்ந்து பரபரப்பாக இருந்த நிலையில், இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் வந்தது. இதனையடுத்து, உயர்நீதிமன்றம் தெளிவாக "இரு தரப்பினரும் இனிமேல் வெளியுறவு தொடர்பான எந்த அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது" என சட்டபூர்வ உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் தற்போது ரவி மோகன் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும், தவறான தகவல்கள், அவதூறு பதிவுகள் மற்றும் பொய்யான மீம்ஸ்கள் இவை அனைத்தும் 24 மணி நேரத்திற்குள் Facebook, Instagram, Twitter உள்ளிட்ட எல்லா சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறினால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement