• Sep 02 2025

குடும்பம் பிரிந்தாலும்... பாசத்திற்கு குறைவில்லை.! ரவிமோகன் பகிர்ந்த போட்டோஸ் வைரல்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் ரவி மோகன், சமீபத்திய நாட்களில் தனிப்பட்ட வாழ்வில் நடந்த விஷயங்களால் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 


ரவி தனது மனைவியான ஆர்த்தியுடன், கடந்த சில மாதங்களாகவே கருத்து முரண்பாடு வந்ததாகவும் இதனாலேயே அவர்களிடையே பிரிவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், நேற்று நடந்த ஒரு நிகழ்வு பலரது மனதையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் ரவி மோகனின் மூத்த மகன் ஆரவின் பிறந்த நாளை முன்னிட்டு, இரு மகன்களையும் சந்தித்து, சிறிது நேரம் மகிழ்ச்சியாக கதைத்துள்ளார். இந்த சந்திப்பு, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தின் மூலமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டது.


தந்தையாக மகன்களோடு எடுத்துக்கொண்ட அந்த அன்பு நிறைந்த புகைப்படத்துடன், ரவி மோகன் தனது இதயத்திலிருந்து எழுந்து வந்த வார்த்தைகளையும் பதிவு செய்திருந்தார். அதன்போது, "என் பெருமை... என் குரும்பாக்கள்!" எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisement

Advertisement