• Apr 26 2025

கோபத்தில் கொந்தளிக்கும் பாக்கியா..! சுதாகருக்கு எதிராக ஸ்கெட்ச் போடும் எழில்..!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் கோபியைப் பாத்து சம்மந்தி அம்மாவுக்கு ஏன் என்மேல இன்னும் நம்பிக்கையே வரேல என்று கேக்கிறார். மேலும் நீங்க அவங்களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தால் நான் இன்னொரு தடவ வடிவா சொல்லியிருப்பேன் என்கிறார். அதனை அடுத்து ரெஸ்டாரெண்டோட நேம் தான் மாறுது என்று சொல்லிட்டு இப்ப ரெஸ்டாரெண்டே இனியாவுக்கு மாறுது என்று சொன்னதில தான் அம்மா கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டா என்று செழியன் சொல்லுறார்.

அதைக் கேட்ட சுதாகர் நாம என்னதான் ஒரே குடும்பம் என்று சொன்னாலும் சட்டம் அதை வேறமாதிரி சொல்லுது என்கிறார். மேலும் ஒரு மாசத்துக்குள்ள அந்த இடத்தில என்னோட ரெஸ்டாரெண்ட் வந்தே ஆகணும் என்று சொல்லுறார். அத்துடன் டைம் இல்லாததால தான் உங்ககிட்ட என்னால சொல்ல முடியவில்லை என்று சுதாகர் கோபியிடம் மன்னிப்புக் கேட்கிறார்.


இதைக் கேட்ட கோபி எனக்கு ஒரே குழப்பமா இருக்கு என்று செழியனைப் பாத்துச் சொல்லுறார். பின் கோபி வீட்டுக்கு வந்து பாக்கியாட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா அந்தப் பத்திரம்  எழுதுறதுக்கு முன்னாடியே அவர் எங்கிட்ட பேசியிருக்கோணும் தானே என்கிறார். மேலும் சுதாகர நீங்க வேணும் என்றால் நம்பலாம் ஆனா நான் நம்ப மாட்டேன் என்று சொல்லுறார்.

அதனை அடுத்து ரெஸ்டாரெண்ட வாங்கினது கூடப் பரவாயில்ல என்னோட பொண்ணுக்கு மட்டும் ஏதாவது செய்தார் என்றால் அவரை கண்டிப்பாக சும்மவே விடமாட்டேன் என்கிறார் பாக்கியா. பின் செல்வியைப் பாத்து ஏன் நீ இனியாவோட கலியாணத்துக்கு வரேல என்று கேக்கிறார். அதுக்கு செல்வி அங்க வந்தால் ஈஸ்வரி ஏதும் கதைப்பா அதுதான் வரேல என்கிறார். இதனை அடுத்து எழில் சுதாகர் மேல கேஸ் போடலாம் என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement