• Apr 26 2025

பணத்திற்காக என் மதிப்பை விற்கமாட்டேன்...! நடிகை சமந்தா ஓபன்டாக்..!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகைப் போன்று பாலிவுட்டிலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய நடிகை சமந்தா. இவர் ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் தரும் ஹீரோயின்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 'மனம்’ மற்றும் ‘அஞ்சான்’ போன்ற படங்களில் அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றன.


எனினும், சமீப காலமாக அவர் நடித்த 'சகுந்தலம்' மற்றும் 'குஷி' ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதனால் திரையுலகில் இருந்து சிறிது பின்னோக்கிச் சென்றுள்ளார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இது போன்ற விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் தனது சொந்த வழியில் பயணத்தைத் தொடரும் தைரியமான நட்சத்திரமாக சமந்தா விளங்குகின்றார்.

தற்போது, திரைப்படங்களை விட வெப்சீரிஸ் தளத்தில் தனது திறமையை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார் சமந்தா. சமீபத்தில் நடைபெற்ற ஓர் பேட்டியில், விளம்பரங்களில் நடிப்பது குறித்தும், ஏன் சில பெரிய வாய்ப்புகளை தவிர்க்கின்றார் என்பதையும் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.


அதன்போது அவர் கூறியதாவது, "எனக்கு 15 பெரிய விளம்பர வாய்ப்புகள் வந்தன. அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் தனக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வந்திருக்கும் என்றார். எனினும், அந்த விளம்பரங்கள் எனது மதிப்புக்கு எதிராக இருந்ததால் நான் எல்லாவற்றையும் No சொல்லுகின்றேன்." என்றார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி சமந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். பணம் முக்கியம் என்றாலும், ஒவ்வொரு பிரபலமும் தங்கள் வரம்பை தெரிந்து நடக்க வேண்டும் என்பதற்கான அருமையான எடுத்துக்காட்டாக இது அமைகிறது.

Advertisement

Advertisement