தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர், ஹிந்தி திரையுலகில் காலடி பதிக்கவுள்ள முக்கியமான படமாக 'வார் 2' உருவாகியுள்ளது. ஹ்ரித்திக் ரோஷனும் ஜூனியர் என்.டி.ஆரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக கவர்ச்சியுடன் நடிக்கிறார்.
இந்தப் படத்தை 'பிரமாஸ்திரா' புகழ் இயக்குனர் அயன் முகர்ஜி இயக்க, யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்ஷன், அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான திருப்பங்கள் நிறைந்த இப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, தற்போது "ஜனாப் இ ஆலி" என்ற பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கலக்கலான நடனத்தில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்.
இந்த டான்ஸ் சீன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வித்தியாசமான கதைக்களம், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள், மற்றும் ஹிரோஸ் நடிப்புத் திறமை இவை அனைத்தும் வார் 2 படத்தை இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாற்றியுள்ளது.
Listen News!