நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஆங்கில வெப் சீரிஸ் Wednesday சீசன் 2 இன் முதல் பகுதி இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது. மிஸ்டரி, ஹாரர் கலந்து உருவான இந்த தொடரின் அடுத்த எபிசோடுகள் வாரந்தோறும் வெளியாக உள்ளன. விஷ்ணு விஷால் தயாரித்து, மிஸ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள தமிழ் திரைப்படம் Oho Enthan Baby, ஆகஸ்ட் 8ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும், ஓடிடியில் புதிய உயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்ட்வெர்ப் வைரக் கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான ஆவணப்படம் Stolen, ஆகஸ்ட் 8 அன்று நெட்பிளிக்ஸில் வெளிவருகிறது. இது நூற்றாண்டு கொள்ளையாகக் குறிப்பிடப்படும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. திகில் மற்றும் காமெடிக்கு இடையிலான சென்சாரி அனுபவமாக Lisa Frankenstein நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் தற்போது ஓடிடியில் ரீலீஸ் ஆகியுள்ளது.
மலேசியத் திரில்லர் ஆக்சன் படம் Blood Brothers, ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியானது. நான்கு மாதங்கள் கழித்து, இது தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. கால்பந்துத் துறையில் முன்னணியில் உள்ள வீரர்களையும் பயிற்சியாளர்களையும் மையமாகக் கொண்ட SEC Football தொடரும் ஓடிடியில் ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது.
Listen News!