• Jul 18 2025

தியட்டரை அதிரவைக்கும் "கண்ணப்பா".! பாசிட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்....

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


தொடர்ந்து பல தடைகளையும் சவால்களையும் தாண்டி, இந்தப் படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபு மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். மிகுந்த ஆன்மீகத்தையும், பாரம்பரிய கதையையும் மையமாகக் கொண்ட இப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகுந்த பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

படத்தின் மையக்கரு பகவான் சிவனின் பக்தர் கண்ணப்பா பற்றிய புராண கதையை அடிப்படையாகக் கொண்டது. காலஹஸ்தி கோயிலில் வழிபட்ட கண்ணப்பர் “தனது கண்களை பிடுங்கி சிவலிங்கத்தில் வைக்கும்” பக்தியினை, உணர்வுபூர்வமாகவும் சினிமாவுக்கேற்ப மாஸ் வடிவமாகவும் இயக்குநர் சித்தரித்துள்ளார்.


இது ஒரு புராண கதை மட்டுமல்ல, நம்பிக்கை, தியாகம் கலந்த உணர்ச்சி மிகுந்த கலைக்காட்சி. இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. கண்ணப்பாவின் கேரக்டரின் உணர்ச்சி, தியாகம் ஆகியவற்றில் விஷ்ணு வாழ்ந்துள்ளார் என்பதே ரசிகர்களின் கருத்து.

தனது கண்களை பிடுங்கி எடுக்கும் காட்சி சினிமா ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வரவைக்கும் அளவுக்கு உணர்ச்சிபூர்வமாகவும், அதிரடியாகவும் அமைந்திருந்தது. இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார் , பிரபாஸ் , மோகன்லால் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

படம் வெளியாகியுள்ள முதல்நாளே, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் உணர்ச்சிகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பார்க்கும் போது படம் கோடிக்கணக்கான வசூலை பெற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement