கோபி பாக்கியாவ தன்னோட இருந்து சாப்பிடக் கேக்கிறார். அதுக்கு பாக்கியா செல்வியும் நானும் சேர்ந்து சாப்பிடுறோம் நீங்க இப்ப சாப்பிடுங்க என்று சொல்லுறார். இதனை அடுத்து கோபி பாக்கியாவோட கொஞ்சம் பேசணும் இதில இரு என்று சொல்லுறார். பின் கடை பிஸ்னஸ் எல்லாம் எப்புடிப் போகுது என்று பாக்கியாவப் பாத்துக் கேக்கிறார்.
அதைக் கேட்ட பாக்கியா எப்புடி போகுது என்று சொல்லத் தெரியல நேற்றைய விட இண்டைக்கு நல்லாப் போகுது என்கிறார். அதுக்கு கோபி இதே மாதிரியே போன இந்த ஹோட்டலுக்குப் பக்கத்திலேயே இன்னொரு ஹோட்டல் திறந்திடுவ என்று சொல்லுறார். பின் பாக்கியா இதைத் தான் பேசவேணும் என்று சொன்னீங்களா என்று கேக்கிறார். அதுக்கு கோபி இல்ல வேறஒரு விஷயம் கதைக்கணும் என்று சொல்லுறார்.
அதனைத் தொடர்ந்து லோனக் கட்டி முடிச்சு வேற பணம் இருக்கா என்று கேக்கிறார். அதுக்கு பாக்கியா லோன் கட்டவே எல்லாப் பணமும் முடிஞ்சிருச்சு என்கிறார். அதனை அடுத்து ஈஸ்வரியும் கோபியும் சுதாகர் வீட்ட போய் நிற்கிறார்கள். பின் சுதாகர், என்ன திடீரென்று இங்க வந்திருக்கீங்க என்று கேக்கிறார். இதனை அடுத்து ஈஸ்வரி இனியாவ பாத்திட்டுப் போக வந்தனாங்க என்று சொல்லுறார்.
பின் ஈஸ்வரி இனியாவப் பாத்து இந்த சம்மந்தத்திற்கு முன்னால ரெஸ்டாரெண்டில நடக்கிற எந்தப் பிரச்சனையும் பெருசா ஜோசிக்காதா என்று சொல்லுறார். அதுக்கு இனியா எப்புடி பாட்டி அம்மாவப் பற்றி ஜோசிக்காமல் இருக்கிறது என்று கேக்கிறார். அதனை அடுத்து பாக்கியா செல்வியப் பாத்து கவுன்சிலர் மட்டும் பிரச்சனை பண்ணாமல் இருந்தார் என்றால் நாங்க நல்ல படியா சம்பாதிச்சிரலாம் என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!