இந்திய கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக மறைமுகமான மனநிலைக் கவனிப்புடன் பிரபல்யமாகி வருகின்றார். அந்தவகையில், தற்பொழுது பாடகர் ஒருவர் விராட் கோலிக்கு 'நன்றி' சொன்ன தகவல் இன்ஸ்டாவில் வைரலாகி வருகின்றது.
அந்தப் பாடகர் வேறுயாரும் இல்லை ராகுல் வைத்யா தான். இவர் வெளியிட்ட பதிவொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் அவர், தன்னை இன்ஸ்டாகிராமில் பிரபலமாக்குவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நன்றி தெரிவித்திருக்கின்றார்.
ராகுல் வைத்யா கடந்த வருடம் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய அணியின் தோல்வியை அடுத்து விராட் கோலி மற்றும் அவரை ஆதரித்த ரசிகர்களைப் “ஜோக்கர்ஸ்” என்று கிண்டல் செய்திருந்தார். இந்த கருத்து விராட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தக் கருத்துக்குப் பின்னர், விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ராகுல் வைத்யாவை பிளாக் செய்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பலவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும் கிளப்பியது. இந்நிலையில், ராகுல் வைத்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சிகரமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "என்னை அன்புடன் அன்பிளாக் செய்ததற்காக நன்றி விராட்..! நீங்கள் இந்த உலகம் கண்ட சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சாதனைகள் இந்திய கிரிக்கெட்டின் பெருமையாக உள்ளன. உங்கள் மீது நான் எப்போதும் மரியாதையுடன் இருக்கிறேன். ஜெய் ஹிந்த்..! கடவுள் உங்களையும் உங்கள் அழகான குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும்." என்றார்.
இந்தப் பதிவு விராட் கோலி ரசிகர்களிடையே ஒரு நெகிழ்ச்சியான மாற்றத்தை உருவாக்கியது. பலரும், “தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, பாராட்டுவது ராகுல் வைத்யாவின் சிறப்பான மனநிலையைக் காட்டுகிறது.” எனப் பாராட்டியுள்ளனர்.
Listen News!