• May 06 2025

பாக்கியா சொன்ன குட்நியூஸ்.. கடும் கோபத்தில் ஈஸ்வரி.! திடீர் மாற்றத்துடன் பாக்கியலட்சுமி..!

subiththira / 9 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கடையோட ஓனர் ஆம்பளைங்க கிட்ட என்றால் பிஸ்னஸ் பேசுறது ஈஸி பொம்பளைங்க கிட்ட எப்புடி பிஸ்னஸ் பேசுறது என்று கேக்கிறார். அதுக்கு செல்வி அதென்னமோ சரிதான் பொம்பளைங்க கிட்ட சமைச்சுக் கொடு என்று பேசியே பழகியிருப்பீங்க என்கிறார். மேலும் அதுதான் உங்களுக்கு பிஸ்னஸ் பேசுறதுக்கு கஷ்டமா இருக்கு என்கிறார்.

இதனை அடுத்து பாக்கியா ஓனரைப் பாத்து நீங்க ஆம்பளைங்களுக்கே கடையக் கொடுங்க என்று சொல்லுறார். பின் செல்வி பாக்கியாவப் பாத்து அந்த ஓனருக்கு பொண்டாட்டி இருந்தா ரொம்ப பாவம் அவங்கள இந்த ஓனர் எதுவுமே செய்ய விடமாட்டார் என்று சொல்லுறார். மேலும் செல்வி தான் இரவு முழுக்க பாக்கியாவ நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததாகச் சொல்லுறார்.


அதைக் கேட்ட பாக்கியா என்ன நினைச்சு ஒன்னும் கவலைப்படாமல் நீ சந்தோசமா இரு என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து பாக்கியா கடை பாக்கிற விஷயம் வீட்ட இருக்கிற யாருக்குமே தெரியாது என்கிறார். பின் பாக்கியா வேற ஒரு கடையைப் பாத்து வாங்குறார். மேலும் பாக்கியா செல்வியப் பாத்து என்ர புது முயற்சியில நீ கூடவே இரு என்று சொல்லுறார்.

இதனை அடுத்து பாக்கியா வீட்ட இருக்கிற எல்லாருகிட்டயும் மறுபடியும் ரெஸ்டாரெண்ட் திறக்கப் போறேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ஈஸ்வரி உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று கேக்கிறார். பின் ஈஸ்வரி கையில கொஞ்சப் பணம் வந்தோன மறுபடியும் தொடங்கிட்டியா என்று கேக்கிறார். அதைத் தொடர்ந்து ஈஸ்வரி இந்த ரெஸ்டாரெண்ட் எல்லாம் உனக்குத் தேவையில்ல என்று சொல்லுறார். இது தான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement