சன் டீவி தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் சிறப்பாக நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை கேப்ரில்லா. பலரது வீட்டுத் தேவதையாக, தொலைக்காட்சியில் பாசமும், பரிவும் கொட்டும் பெண்ணாக காட்சியளித்த கேப்ரில்லா, தனது நிஜ வாழ்க்கையிலும் இப்பொழுது புதிய கட்டத்தை எட்டியுள்ளார். இன்று காலை, மகிழ்ச்சியான செய்தியொன்றை ரசிகர்களுக்குப் பகிர்ந்துள்ளார்.
இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கேப்ரில்லா ஒரு இனிய செய்தியுடன் புதிய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தனது கைப்பிடியில் குழந்தையின் சிறிய கை விரல்கள் இருக்கும் படியாக உள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதன்போது தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது எனக் கூறியிருந்தார். மேலும், “இன்று என் வாழ்க்கையின் ஒரு புதிய பிறவி. என் குழந்தை எனது உயிரின் ஒரு பகுதி. இதுவரை நான் அனுபவிக்காத ஒரு நிம்மதியும், சந்தோஷமும் இன்று என் இதயத்தை நிரப்புகிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் , மிக முக்கியமாக எனது இனிய ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!” என்று கூறியிருந்தார்.
கடந்த மாதங்களில், கர்ப்ப காலத்தில் இருந்தபோதும் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக புகைப்படங்களைப் பகிர்ந்தார் கேப்ரில்லா. ‘சுந்தரி’ சீரியல் மூலம் புதிய கதாப்பாத்திரத்தைக் கொண்டு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய கேப்ரில்லா, கடந்த ஒரு மாதங்களாகவே தன் கர்ப்ப காலம் மற்றும் குடும்ப வாழ்வை தனிப்பட்ட முறையில் மேனேஜ் செய்து வந்தார். அத்தகைய நடிகை தற்போது தாயாகியிருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Listen News!