• Jul 31 2025

கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட் ...! இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!

Roshika / 23 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் பிற தென்னிந்திய திரையுலகில் பிரபலமாக வலம் வரும்  நடிகை கீர்த்தி சுரேஷ், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2000களில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், 2013ஆம் ஆண்டில் வெளிவந்த மலையாளத் திரைப்படமான 'கீதாஞ்சலி' மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.


தமிழ் சினிமாவில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையால் திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார்.

தற்போது இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள  புகைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. கவர்ச்சியை முன்வைத்து எடுத்த இந்த புகைப்படம், பலரது பாராட்டையும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது. போட்டோஷூட்டுக்கான அந்த உடைத் தேர்வும், அவர் காட்டிய தன்னம்பிக்கையும் பலரை கவர்ந்துள்ளது.


இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட பன்முக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் மட்டும்  திரையுலகத்தினரும் இந்த புகைப்படத்துக்கு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.






Advertisement

Advertisement