• Jul 31 2025

63 வயது டாம் குரூஸுடன் 37 வயது அனா டி அர்மாஸ் டேட்டிங்? வைரலாகும் புகைப்படங்கள்!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகத்தில் பிரபலங்களின் காதல், டேட்டிங், லிவ்-இன் ரிலேஷன்ஷிப், பிரேக் அப் போன்ற விஷயங்கள் சாதாரணமாகவே பார்க்கப்படுகின்றன. தற்போது அந்த வகையில், உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸும் (63), கியூபன் சூப்பர் ஸ்டார் அனா டி அர்மாஸும் (37) டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சமீபத்தில் வெளியான 'Mission: Impossible – Dead Reckoning' திரைப்படத்தின் மூலம் உலகமெங்கும் ரசிகர்களைத் திருப்திபடுத்திய டாம் குரூஸ், அதில் இடம்பெற்ற அபாரமான ஸ்டன்ட் காட்சிகளுக்காக கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளார். இவர் எப்போதும் பிஸியான திரைப்படங்கள், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் பேசப்படுகிறார்.

இந்நிலையில், 'Knives Out', 'No Time to Die' உள்ளிட்ட படங்களில் நடித்த அனா டி அர்மாஸ், டாம் குரூஸுடன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருவரும் சமீபத்தில் வெளியுலாக சுற்றியதையடுத்து, பல்வேறு பொது இடங்களில் கை குலுக்கி, சிரித்து உரையாடும் வகையில் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை களைகட்ட வைத்துள்ளன.


இதனால், இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனர் என்பதே ஹாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. அவர்களின் வயது வித்தியாசம், கலாச்சார வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி காதலாக உருவெடுத்திருக்கும் இந்த உறவை ரசிகர்கள் பெரிதும் வரவேற்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







Advertisement

Advertisement