தமிழ் சினிமா மற்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதமாகியிருக்கும் ஒரு உண்மையான காதல் கதையே தற்போது அனைவரையும் உருக்கும் வகையில் மாறியுள்ளது. நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து கேட்டிருப்பதோடு, பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் நெருக்கமான உறவுக்குள் இருப்பது சமீப காலங்களில் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், இன்று நேரடியாக ரவி மோகன் வெளியிட்டுள்ள உணர்வு பூர்வமான கூற்று, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும், எதிர்ப்புக் கருத்துக்களையும் கிளப்பி இருக்கிறது. நடிகர் ரவி மோகன் தனது உரையில் கூறியதாவது, “நான் கண்ணீர், ரத்தம் என துடித்துக் கொண்டிருந்த வேளையில், எந்த ஆதரவும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய போது, எனக்கு ஆதரவாக இருந்தவர் கெனிஷா. அவர் தான் என் வாழ்வில் ஒளியைக் கொண்டு வந்தார்.” எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர், “இன்றைக்கு என் வாழ்க்கையை மீட்டவர் யாரென்றால், அது கெனிஷா தான். அவளை அவமதிக்கும் எந்த செயலுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன். என் வாழ்க்கையின் உண்மையான துணையாகவும் என் பரிதாப காலத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தவர் கெனிஷா மட்டும் தான்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரவி மோகனின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் துன்பம், நெருக்கடி, குடும்ப பிரச்சனைகள் என கலங்கிப் போனதாகவும், அதிலிருந்து அவரை மீட்டவர் கெனிஷா என அவர் கூறுவது, மிகவும் தனிப்பட்ட உணர்வு வெளியீடாக பார்க்கப்படுகின்றது.
ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதைமுன்னிட்டு, ப்ரீத்தா கணேஷ் திருமண விழாவில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து பங்கேற்றது, இந்த விவகாரத்தை மேலும் ஊக்குவித்ததுள்ளது.
Listen News!