• May 16 2025

"கோவிந்தா" பாடல் நீக்கம் ...! படக்குழு அறிவிப்பு ..!

Roshika / 10 hours ago

Advertisement

Listen News!

தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாகியது"DD Next Level" திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் நாளைய தினம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? எனக் கேள்வி எழுந்திருந்த நிலையில் படக்குழு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.


இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவக நடித்துள்ளார் இந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென படக்குழுவிற்கு அதிர்ச்சி தரும் வகையில்  இந்த படத்தில் இடப்பெற்ற பாடல் ஒன்றிற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.


இந்து மக்களில் கடவுளான பெருமாளை தவறாக சித்தரித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது . அதுமட்டுமல்லால் அந்த பாடலை நீக்குமாறும் 100 கோடி கேட்டும் ரெட் நோட்டிஸ் படக்குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது படக்குழு அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது.


இந்த படத்தில்"கோவிந்தா கோவிந்தா"இடம் பெற்ற பாடலை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளைய தினம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியி டப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது .இதனை பார்த்த ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement