தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகராகவும் சமூக வலைத்தளத்தில் favourite-ஆகவும் இருக்கும் கூல் சுரேஷ், சமீபத்தில் நடைபெற்ற ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தனது பேச்சால் அனைவரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளார்.
அந்த விழா மேடையில் கூல் சுரேஷ், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பட்டங்களில் ஒன்றான "உலகநாயகன்" பட்டத்தை இனி யாருக்கு கொடுக்கவேண்டும் என்பதை மிகவும் வினோதமாகவும், நெகிழ்ச்சியாகவும் விளக்கியிருந்தார்.
கூல் சுரேஷ் அதன்போது, “கமல் சார் உலகநாயகன். அதில் எந்த மாற்றும் இல்லை. ஆனா இப்போ அவர் ‘விண்வெளி நாயகன்’ ஆகிட்டாங்க. ஏனெனில் ‘தக் லைஃப்’ போன்ற படங்கள் மூலம் அவர் இப்போது ஒரு புதிய உயரத்திற்கு சென்றுவிட்டார். அந்த உலகநாயகன் இடம் இப்போது வெறிச்சோடுது. அதனால என் தலைவன் STR தான் அந்த பட்டத்திற்கு நியாயமானவர். தயவுசெய்து STR-க்கு அந்தப் பட்டத்தை கொடுங்க..!” என கேட்டுக்கொண்டார்.
கூல் சுரேஷின் இந்த உரையைத் தொடர்ந்து, நிகழ்வில் உள்ள அனைவரும் பாராட்டினார்கள். STR ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் “#UlagaNayaganSTR” என்ற ஹாஷ்டாக்கினைப் பரவலாகப் பயன்படுத்தி வீடியோக்களையும் உருவாக்கி வருகின்றனர்.
Listen News!