உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட படம் தான் ‘தக் லைஃப்’ (Thug Life). மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் இந்த மாபெரும் படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக உருவெடுக்கிறது. இதில் கமல்ஹாசனுடன் சிலம்பரசன், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால், இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘ஓ மாறா…’ என்ற காதல் பாடலின் லிரிக்கல் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
‘ஓ மாறா’ என்பது ஒரு மென்மையான காதல் பாடல். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மாயாஜாலத்தில் உருவாகியிருப்பதென்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே YouTube-ல் 1 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பாடலுக்கான பாசிட்டிவ் கமெண்ட்ஸினையும் போட்டு வருகின்றனர்.
Listen News!