பிரேமலு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, நஸ்லின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ள ‘லோகா’ திரைப்படம், நேற்று (ஆகஸ்ட் 28) வெளியானது. டொமினிக் அருண் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளராக துல்கர் சல்மான் இருப்பது கூடுதல் சிறப்பு. அவர் தயாரித்த இந்தக் கதையம்சம் மற்றும் காட்சிப்படுத்தல் மலையாள சினிமாவை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளது என ரசிகர்கள் பெருமையாக கூறுகின்றனர்.
கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு மிகவும் பாராட்டை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளையும், சுவாரஸ்யமான திரைக்கதையையும் புகழ்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே, ‘லோகா’ திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு நாளை (ஆகஸ்ட் 30) வெளியாகவுள்ளது. தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால், டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகின்றன. மோகன்லால் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படத்தை விடவும், ‘லோகா’ திரைப்படத்திற்கு அதிகமான முன்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
‘லோகா’ திரைப்படம் பிரேமலு ரசிகர்களுக்கான இனிமையான விருந்து மட்டுமல்லாது, மலையாள சினிமாவின் வளர்ச்சியை சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய படையாகவும் அமைந்துள்ளது.
Listen News!