பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் செந்தில் வாங்கிக் கொடுத்த T- shirtஐ தனக்கு பிடிச்சுப் பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் ராஜியை பார்த்து உன்ர அண்ணா இப்புடி எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறாரா என்று கேட்கிறார். அதைக் கேட்ட உடனே ராஜி எதுவும் கதைக்காமல் அமைதியாக நிற்கிறார். இதனை அடுத்து ராஜி கதிர் கிட்ட குமாரோட அம்மா சொன்ன விசயத்தை எல்லாம் சொல்லுறார்.
அதைக் கேட்ட கதிர் உங்க குடும்ப விசயத்தில நான் எல்லாம் குறுக்க வரமாட்டேன் என்று சொல்லுறார். மேலும் இந்த விசயத்தில நான் குமாருக்கு எதிராகத் தான் இருப்பேன் என்கிறார். மறுநாள் காலையில கதிர் ராஜியை ground-க்குப் போகலாம் வா என்று சொல்லுறார். அதுக்கு ராஜி என்ன புரிஞ்சு கொள்ளாத ஆளோட என்னால வர முடியாது என்கிறார்.
மறுபக்கம் முத்துவேலோட அம்மா வேற ஒரு பொண்ணை குமாருக்கு செய்து வைக்கிறதை விட அரசியை செய்து வைக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் அரசியை மட்டும் என்ர பையனுக்கு செய்து வைக்கமாட்டேன் என்கிறார்.
பின் ராஜியோட சித்தி ராஜிகிட்ட எவ்வளவோ கெஞ்சியும் அவள் கேட்கல என்று வீட்ட இருக்கிற ஆட்களுக்கு சொல்லி அழுகிறார். அதைத் தொடர்ந்து ராஜி 10 லட்சம் பரிசு கிடைக்கும் என்பதற்காக டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ள ரெடி ஆகிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!