• Aug 28 2025

இயக்குநரிலிருந்து ஹீரோவாக.! அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் பூஜை கிளிக்ஸ் வைரல்.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

"டூரிஸ்ட் பேமிலி" திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தன்னை அறிமுகப்படுத்திய அபிஷன் ஜீவிந்த், தற்போது கதாநாயகனாக தனது அடுத்த பயணத்தை தொடங்கியுள்ளார். அவரது நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் தற்போது அதிகாரபூர்வமாக பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. இந்த முக்கிய நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.


இந்தப் புதிய படத்தை இயக்குவதற்கான பொறுப்பை "டூரிஸ்ட் பேமிலி"யின் உதவி இயக்குநராக பணியாற்றிய மதன் ஏற்கிறார்.  MRP Entertainment, இப்படத்தின் தயாரிப்பை மேற்கொண்டு வருகின்றது.


படத்தின் பூஜை நிகழ்வு, ஒரு எளிமையான முறையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement